பிரியாணிக்குப் பேர் போன நடிகர் என்றால் அது விஜயாகத்தான் இருக்கும், அப்படி பட்ட ஒரு உறவு விஜய்க்கும், பிரியாணிக்கும். விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் சரி, இவரின் ரசிகர்களுக்கும் சரி பிரியாணி விருந்து படைப்பது இவருடைய வழக்கம். இந்த வழக்கத்தை பயன்படுத்தி தயாரிப்பாளர் ஒருவர் ஆதாயத்தேடப்போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
'சுறா' படத்தின் மூலம் பிரமாண்டமான தோல்வி விழாவை கண்ட விஜய், தனது 'வேலாயுதம்' படத்தின் துவக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறார். ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். (இதுவும் ஒரு ரீமேக் படம்தானாம்)
இந்த படத்தின் துவக்க விழா ஜூலை 15ஆம் தேதியன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கவுள்ளது. இவ்விழாவில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் கலந்துக்கொள்கின்றனர். ரசிகர்கள் முந்நிலையில்தான் படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்று விஜய் விரும்பியதால்தான் இந்த ஏற்பாடு என்று சொல்லப்பட்டாலும், படத்தில் வரும் ஒரு காட்சிக்காக துணை நடிகர்களுக்கு பதிலாக விஜயின் ரசிகர்களை பயன்படுத்திக்கொள்வதுதான் தயாரிப்பாளரின் திட்டம் என்று கூறப்படுகிறது.
இதற்காக விஜய் ரசிகர்களுக்கு விஜய் படம் போட்ட பனியன் ஒன்றும், பிரியாணி பொட்டலுமும் கொடுக்கப்போகிறார்களாம். ஏதாவது இதுபோன்ற விழா என்றால் கூட்டத்தை சேர்ப்பதில் விஜயும், அவருடைய தந்தையும் திறமைசாலிகள். ஆனால் அந்த கூட்டத்தை இப்படி லாபநோக்கத்துடன் பயன்படுத்திக்கொள்ளும் தயாரிப்பாளர் அவர்களை விட திறமைசாலி என்று நிருபித்து விட்டாரே!
1 comment:
Here vijay and vijay's father they are the only intelligent.They are using the Producer money to see the fan's. They will try to get in politics every one know this. They are looking political parties meeting. That's why they give Briyani Pottalam to fans. But here fans are good Because they not come to see the vijay and his father. they are coming to visit all the places in chennai like a tourist.Here Who will the loser? Who is the Intelligent?
Post a Comment