Sunday, October 31, 2010

சுரணை என்ன விலை

சன் டிவியின் தில்லாலங்கடி, அழகிரி மகனின் "வ" குவாட்டர் கட்டிங் போன்ற மானங்கெட்ட படங்களுக்கு எல்லாம் வரிவிலக்கு அளித்து விட்டு "ஒச்சாயி" தமிழ் பெயர் இல்லை என்று கூறி வரிவிலக்கு அளிக்க மறுத்து இருக்கும் தமிழக அரசு அதிகாரிகளையும், சுரணை என்ன விலை என்று கேட்கும் கருணாநிதியையும் எதைக் கொண்டு அடிக்கலாம்?

Thursday, October 7, 2010

சபாஷ்! சரியான போட்டி

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிவிட்டது சன்டிவியின் நிலைமை!

மூன்று நாட்களுக்கு முன்பு தினமணியில் "எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்" என்ற தலைப்பில் எந்திரன் படத்துக்காக சன்டிவி செய்யும் அராஜகங்களை அப்பட்டமாக எடுத்து உரைத்தது ஒரு கட்டுரை.



இந்த செய்திக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் சார்பாக இந்த நாளிதழுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்றால் கிரிமினல் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படுமாம்.

இதையடுத்து நேற்று அதே தினமணியில் "இணையதளத்தில் எந்திரன் - அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியது. அதில் எந்திரன் படம் இணையத்தில் கிடைக்கும் இணைய முகவரியை முற்று முழுவதும் தெளிவாக வெளியிட்டு 100 பேருக்கு தெரிந்ததை 1000 பேருக்கு தெரியும் மாதிரி செய்துவிட்டது. இந்த ஒரு இணையத்தில் மட்டுமல்ல மேலும் சில இணையதளங்களிலும் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது "எந்திரன்" என்பது கூடுதல் தகவல்.



இந்த பதிவு எழுதும் போதே தினமணி குறிப்பிடும் இணையத்தின் வருகையாளர் எண்ணிக்கை 76,000-த்தை தொட்டிருந்தது.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அல்லவா!"

-----------------------

சமீபத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி,

"ரஜினிகாந்த் தனது மகளின் திருமணத்திற்கு தனது ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று கூறியதற்காக அவரால் கூறப்பட்ட காரணம் - கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் துன்புற வேண்டாம் என்று தான் வேண்டாம் என்று கூறினேன்.

ஆனால் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுக்கும் இவரது ரசிகன் கூட்ட நெரிசலில் சிக்கியும் காவல் துறையினரிடம் தடியடி வாங்கியும் படம் பார்க்க வரும் போது இவருக்கு இதெல்லாம் தெரியவில்லையா .....???"