Wednesday, March 31, 2010

சூதாட்டம்.. ஆச்சிரியம்.. அசிங்கம்

இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனுக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணி அடுத்த ஆண்டு முதல் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட போகின்றதாம்! ஐ.பி.எல் என்பது ஒரு சூதாட்டம், பங்குச் சந்தை என்பதும் ஒரு சூதாட்டம் தான். இரண்டு சூதாட்டங்களையும் ஒன்றினைத்து ஒரு மெகா சூதாட்டம் ஆடப்போகிறார்கள்.
-------------
பென்னாகரத்தில் அ.தி.மு.க அவமானகரமான தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்து தொண்டர் ஒருவர் தீக்குளித்துவிட்டார். இது நடந்தது ஈரோட்டில். திராவிட அரசியல் கட்சி தொண்டனுக்கு தீக்குளிப்பது எல்லாம் டீ குடிப்பது மாதிரி. இதற்கு பின் வந்த செய்தியை தான் ஒன்றுக்கு இரண்டு முறை படித்தும் நமக்கு மயக்கும் வராத குறைதான். தீக்குளித்து ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்க்க ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து வருகிறாராம்...!
------------
அடுத்த ஈழ யுத்தம், பிராபகரன் மரணம், பொட்டு அம்மான் கடிதம் என்று ஈழப்போர் பற்றியும், புலித் தலைவர்கள் பற்றியும் சகட்டுமேனிக்கு எழுதுவதை என்றைக்கு இந்த விகடன், குமுதம், நக்கீரன் மற்றும் இதற ஊடகங்கள் நிறுத்திக் கொள்ளும் என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் "நமக்கு கிடைத்த நம்பகமான தகவல்படி பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பேயில்லை" என்று எழுதினார்கள், அடுத்து "இந்தியாவின் தயவோடு அடுத்த ஈழயுத்தம் ஆரம்பிக்கும்" என்றார்கள். இப்போது "பொட்டு அம்மான், பிராபகரனிடமிருந்து கடிதம் வந்துள்ளது" என்கிறார்கள். இது போல் பல சம்பந்தம் இல்லாத முரணான செய்திகளை அடித்துவிடவேண்டியது. ஏதேனும் ஒன்று உண்மை என்று தெரியவரும் பட்சத்தில் ஜூ.வியில் அன்றே சொன்னோம், நக்கீரன் சொன்னபடி, ரிப்போர்டரில் சொல்லியிருந்தோம் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிகொள்வது..

இவர்களுக்கெல்லாம் விற்பனை ஒன்றே குறிக்கோள். அதற்காக கண்டதையும் எழுதுவார்கள்.
என்ன பொழப்பய்யா இது...!

Wednesday, March 24, 2010

பைத்தியதுக்கு வைத்தியம்

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பித்திரியல பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டரக்கே பைத்தியம் பிடிச்சுதுனா அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பித்திரியல எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர்கிட்ட போய் தன் பைத்தியதுக்கு வைத்தியம் பார்த்துகுவா? - கேட்பவர்களை பைத்தியமாக்கும் புகழ்பெற்ற விசுவின் டயலாக் இது.

இப்படித்தான் ஆகிப்போச்சு இந்த போலி மருந்து கதை. நோய்க்கு போய் மருந்து வாங்கி சாப்பிட்டா அது போலி மருந்தா இருந்து இன்னொரு நோய் வருது. அந்த இன்னொரு நோய்க்கு போய் நல்ல மருந்து வாங்கி சாப்பிட்டா "சைட் எபெக்ட்" சொல்லி இன்னொரு நோயில கொண்டு போய்விடுது. அதுக்கு இன்னொரு மருந்து. இப்படி நோய் - மருந்து - நோய் - மருந்து நிக்காம போய்க்கிட்டே இருக்கு.

இதுக்கெல்லாம் தீர்வு "உணவே மருந்து மருந்தே உணவு" நம்ம முன்னோர்கள் சொன்னதை கேட்டு நடந்தா போதும். இது சாதாரண பழமொழி மாதிரி தெரியலாம் ஆனா இதுல ஆழமான அர்த்தம் இருக்கு.


Monday, March 22, 2010

இப்பவே கண்ணை கட்டுதே!

வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்...

டிரெயினிங் - முடியலை

புது ப்ராஜக்ட் - உட்காந்து யோசிப்பாங்களோ

கஸ்டமர் - வுய் பிளட்.. சேம் பிளட்.. (Why blood saammee blood)

ரெவியூ மீட்டிங் - இப்பவே கண்ணை கட்டுதே

பெர்பார்மன்ஸ் ரெவியூக்கு முன் - இது வாலிப வயசு! பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மண்ட்டு கொஞ்சம் வீக்..

பெர்பார்மனஸ் ரெவியூக்கு பின் - எவ்வளவு அடிச்சாலும் தங்கறான், இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க

போனஸ் - வடை போச்சே

கமிட்மென்ட் - ஓபனிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லேப்பா

மேனேஜர் - என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலயே?

டார்கெட் - வேணாம் வலிக்குது... அழுதுருவேன்!

புரமோஷன் - வரும் ஆனா வராது

ஆடிட் - இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது.. நானும் வரமாட்டேன்.. பேச்சு பேச்சா இருக்கனும்

நன்றி - ராம்பிராகாஷ்

Tuesday, March 16, 2010

சபாஷ் சரியான போட்டி


விரைவு, சொகுசு, சர்வீஸ் என்று விதவிதமான பேருந்துகள் ஓடும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு புதுவரவு. அய்யய்யோ! அதற்கு எவ்வளவு கட்டணம் என்று பயணிகள் அதிர்ச்சி அடைய வேண்டாம். அரதப் பழசு முதல் புது டீலக்ஸ் வரை சென்னையில் ஓடும் பேருந்துகளில் 95% சதவீதம் சென்னையை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. டாடா பேருந்துகளின் எண்ணிக்கை மிக சொற்பம்.

இப்போது டாடா புத்தம் புதிய ஸ்டைலில் "மார்க்கோபோலோ" என்ற புதிய பஸ்களை சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியுள்ளது. லேலண்ட் சொகுசு பேருந்து போல் இல்லாமல் சற்று மாறுபட்ட தோற்றம், அழகான வடிவம், கவர்ச்சியான உள்கட்டமைப்பு என்று கண்களை கவருகிறது. முதல் கட்டமாக 59 பேருந்துகளை மா.போ.க வாங்கியுள்ளது. பல வழித்தடங்களில் இந்த பேருந்துகள் ஓடிக் கொண்டும் இருக்கின்றன.

சென்னை மற்றும் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் (ஏன் இப்பவும் கூட) லாரி, பஸ் மார்க்கெட்டில் அசோக் லேலண்ட் தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. பல வருடங்கள் முயற்சித்தும் வட இந்தியாவில் பரந்து விரிந்து கிடக்கும் டாடா மோட்டர்ஸின் சாம்ராஜ்ஜியத்தை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் அவர்களால் விஸ்தரிக்க முடியவில்லை. காரணம் அசோக் லேலண்ட் (இது எங்க ஏரியா! உள்ள வராதே!). டாடா மற்றும் லேலண்ட் இடையே "அது உன் ஏரியா இது என் ஏரியா!" என்று எழுதிக் கொள்ளப்படாத ஒப்பந்தமே உண்டு என்று இப்போதும் ஒரு பேச்சு உண்டு.
இப்போது டாடா மோட்டார்ஸ் கோட்டையை குடைய ஆரம்பித்துவிட்டது. இனிமேல் போட்டி கடுமையாக இருக்கும்.

ஒரு கேள்வி: டாடா மற்றும் லேலண்ட் இருவருமே குளிர்சாதன பேருந்துகளை உற்பத்தி செய்யும் போது, ஏன் மா.போ.க வால்வோவிடம் இருந்து பேருந்துகளை வாங்கியது? மற்ற தமிழநாடு அரசு போக்குவரத்து கழகங்களில் அசோக் லேலண்ட் பஸ்கள் தானே ஓடிக்கொண்டிருக்கின்றன?

Monday, March 15, 2010

தயாநிதிக்கு திருமணம்

அஞ்சாநெஞ்சர் அழகிரியின் தவப்புதல்வன் தயாநிதிக்கு கல்யாணமாம்! அதுவும் காதல் திருமணம். காதலி சென்னையில் இறுதி ஆண்டு சட்டம் படிக்கும் கோயமுத்தூர் பொண்ணு அனுஷா. இரண்டரை வருட காதல் பெற்றோர்கள் சம்மதத்துடன் கைகூடவிருக்கிறது.

கல்யாணத்திற்கு பிறகாவது பையன் வம்புதும்புக்கு போகாமல் இருந்தால் சரி..!

Sunday, March 14, 2010

கடுப்பு போலீஸ்

தமிழ் நாடு காவல்துறையின் அராஜக அடக்குமுறைக்கு மற்றுமொரு உதாரணம் சனிக்கிழமை நடந்த புதிய சட்டமன்ற திறப்புவிழா! பிரதமர், சோனியா மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சென்னையே அரை நாள் முழுவதும் ஸ்தம்பிக்கவைக்கப்பட்டது.

அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஜி.எஸ்.டி சாலை, வாலாஜா சாலை, சேம்பியர்ஸ் சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளானர்கள் என்று சொல்வது அவர்கள் பட்ட கஷ்டங்களை குறைத்து மதிப்பிடுவது ஆகும். அனுபவித்தால் தான் அந்த வேதனை தெரியும்.

உச்சமாக வி.ஐ.பி கன்வாய் வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே சாலையை கடப்பதற்கு கூட யாரும் அனுமதிக்கபடவில்லை. பாதுகாப்பு என்ற பெயரில் லட்சக்கணக்கான பொதுமக்களை சுடும் வெயிலில் வாட்டி வதைத்தது போலீஸ். பல இடங்களில் ஆத்திரத்திற்கு உள்ளான பொதுமக்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று கம்பீரமாக பேட்டி குடுக்கும் அதிகாரிகளுக்கு அப்படி ஏதும் செய்யப்படவில்லை என்று தெரியுமா? பாதசாரிகள் நடக்க ஒழுங்கான நடைபாதைகளே இல்லாத ஊர் சென்னை. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசலால் பிதுங்கி வழியும் சென்னை சாலைகளை பல மணி நேரத்திற்கு அடைத்து விட்டு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறது போலீஸ். "போக்குவரத்து மாற்றங்கள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் அண்ணா சாலையை பயன்படுத்தவில்லை. அதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை" என்று கூசாமல் பொய் சொல்கிறது இன்றைய 'தினகரன்'.

தினம்தினம் கருணாநிதியோ, ஸ்டாலினோ போகும்போது சில நிமிடங்களுக்கு போக்குவரத்தை நிறுத்தி ஒழுங்குபடுத்தி பெரிய அளவில் நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் காவல்துறையால், ஏன் அப்படி ஒரு ஏற்பாட்டை செய்யமுடியவில்லை. பிரதமரின் பாதுகாப்பு முக்கியம் தான், அதற்காக ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை ஸ்திம்பிக்க வைக்க காவல்துறைக்கு என்ன உரிமை இருக்கிறது.

சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு ஹெலிகாப்டர் மூலம் ஓமந்தூரார் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள தீவுத்திடல் மைதானத்திற்கு பிரமுகர்களை அழைத்து சென்றிருக்கலாமே? சாதாரணமாக நமக்கே இந்த யோசனை தோன்றும் போது, படித்த அனுபவம் உள்ள திறமை வாய்ந்த அதிகாரிகளுக்கு இதுபோல் சுலபமான பல யோசனைகள் தோன்றியிருக்க வேண்டுமே?

மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? ஆட்சியாளர்களான அரசியல்வாதிகளை குளிர்வித்தால் போதும் என்ற ஆணவப்போக்கு தான் காரணமா? அதிகாரிகள் அவர்களது மனசாட்சிக்கு பதில் சொல்லட்டும் ("அப்படி ஒன்று இருந்தால் தானே, அதையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டுத் தானே அரசாங்க வேலைக்கே மனு போடுகின்றோம்" என்று அசரிரீ கேட்கிறதா....!)

Wednesday, March 10, 2010

கார்பரேட் க(அ)ல்சர்

சரியான விடையை தேர்வு செய்க

1. அலுவலகத்துக்கு 5 நிமிடம் தாமதாக சென்றால் ஏற்படும் உடனடி விளைவு?

அ. நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்குச்சந்தையில் கடுமையாக சரியும்.
ஆ. வயதான நிறுவன முதலாளிக்கு மாரடைப்பு ஏற்படும்.
இ. ஏன் தாமதம்? என்று மேலாளருக்கு விளக்கி அவர் அருளும் நல்லவற்றை சிரத்தையோடு கேட்க வேண்டும் (இது மெற்சொன்ன இரண்டையும்விட பயங்கரமானது என்பதை நினைவில் கொள்க).

2. மேலாளர் என்பவர்

அ. நீங்கள் தாமதமாக வரும்போது நேரத்தில் வந்து, நீங்கள் நேரத்தில் வரும்போது தாமதமாக அலுவலகத்திற்கு வருபவர்.
ஆ. எந்த வேலையும் செய்யாமல் அதிக வேலை செய்வது போல் காட்டிக் கொண்டு, நீங்கள் ஒழுங்காக வெலை செய்வது இல்லை என்று மேலிடத்தில் போட்டுக்கொடுப்பவர்.
இ. மேற்கூறிய இரண்டும்.

3. நீங்கள் தெரியாத்தனமாய் தவறு செய்துவிட்டால், உங்களை நோக்கி வரும் முதல் வசனம்

அ. உங்களோட "ஆட்டிடூயூட்" சரியில்லை.
ஆ. உங்களுக்கு "கவுன்சிலிங்" தேவைப்படுது.
இ. எனக்கு அப்பவே தெரியும். நீங்க இதுக்கு ஃபிட் ஆகமாட்டீங்க.

4. "டிரஸ் கோடு" என்பது

அ. திருவான்மியூரில் இருக்கும் அலுவலகத்திற்கு வில்லிவாக்கத்தில் இருந்து கிளம்பும் போதே "டை" கட்டியிருக்க வேண்டும்.
ஆ. சாக்ஸை துவைக்காவிட்டாலும் ஷூவுக்கு பாலிஷ் போட்டிருக்க வேண்டும்
இ. கலர் சட்டை போடாமல், வெள்ளை சட்டைதான் போட வேண்டும். வெள்ளையும் ஒரு கலர்தானே? என்று அநாவசிய கேள்விகள் கூடாது.

5. மறந்தும் நினைத்துவிடக்கூடாதது?

அ. சம்பள உயர்வு.
ஆ. பதவி உயர்வு.
இ. மேற்கூரிய இரண்டும்.

6. மேலதிகாரி தினமும் ஒருமுறையேனும் அனைவரிடமும் உச்சரிக்கும் வார்த்தை

அ. நீ போனா எனக்கு ஆயிரம் பேர் கிடைப்பான்.
ஆ. உன்னையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தா?
இ. ஏன் நீ மட்டும் இப்படி இருக்க?

7. முதலாளி வீட்டு மாடு அன்று ஒரு படி பால் கம்மியாக கறந்தால்

அ. உங்களுக்கு "ஸ்கில் செட்" போதவில்லை.
ஆ. உங்களுக்கு இன்னும் "ட்ரெய்னிங்" தேவைப்படுகிறது.
இ. நீங்கள் வேலையில் "ஸ்மார்ட்" ஆக இல்லை.

8. அலுவலக நேரத்திற்கு பிறகு நீங்கள் உங்கள் சகாவிடம் பேசிக்கொண்டிருந்தால்

அ. அலுவலகத்தில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க முயற்சி செய்கிறீர்கள்.
ஆ. போட்டி நிறுவனத்துக்கு உளவு பார்க்கிறீர்கள்.
இ. நிறுவனத்தை கைப்பற்ற கூட்டு சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்.

9. சேல்ஸ் டார்கெட்?

அ. அன்டாகா கஜம் அபூம்கா திஜம் திறந்திடு சீசே!
ஆ. ஜாலிலோ ஜிம்கானா!
இ. ஙேஙேஙேஙேஙேஙேஙேஙேஙே......

10. காஸ்ட் கட்டிங்?

அ. ஒரு ரூபாயை சேமிப்பது எப்படி என்று பத்து ரூபாயில் ரூம் போட்டு யோசிப்பது.
ஆ. அநாவசிய செலவுகளை அதிகரித்து, அவசிய செலவுகளை குறைப்பது.
இ. எதுவும் சிக்கவில்லையா? சம்பளத்தை குறை.. ஆளைத் தூக்கு...

எல்லா கேள்விகளுக்கும் சரியான விடை அளித்துவிட்டீர்களா? வாழ்த்துக்கள்! உங்களுக்கும் கார்பரேட் அல்சர் ஸாரி கார்பரேட் கல்ச்சர் வந்துவிட்டது..

Monday, March 8, 2010

பரங்கிமலை ஜோதி !

பேசின் பிரிட்ஜ் நடராஜா, கீழ்பாக்கம் சங்கம், அம்பத்தூர் ராக்கி, வில்லிவாக்கம் நாதமுனி, ஆவடி ராமரத்னா, ஆலந்தூர் ராஜா, வண்ணாரப்பேட்டை மகாராணி, பெரம்பூர் பிருந்தா, கோயம்பேடு ரோஹிணி, புதுப்பேட்டை சித்ரா, தண்டையார்பேட்டை அகஸ்தியா, திருவொற்றியூர் ராகவேந்திரா, பரங்கிமலை ஜோதி (!), போரூர் கோபாலகிருஷ்ணா, குன்றத்தூர் பரிமளம், அடையாறு கணபதிராம், திருவான்மியூர் ஜெயந்தி, குரோம்பேட்டை வெற்றி, வடபழனி ராம், ராயப்பேட்டை வுட்லேண்ட்ஸ், அண்ணாசாலை சாந்தி, ஈக்காட்டுத்தாங்கல் காசி, அசோக்நகர் உதயம், கீழ்ப்பாக்கம் ஈகா, புரசைவாக்கம் அபிராமி, கோடம்பாக்கம் லிபர்டி, ஆயிரம் விளக்கு ஆனந்த், தாம்பரம் வித்யா, அமைஞ்சுகரை லட்சுமி, பல்லாவரம் ஜனதா, ராயப்பேட்டை பைலட், வடபழனி கமலா, தண்டையார்பேட்டை எம்.எம், ஈஞ்சம்பாக்கம் பிரார்தனா, கீழ்பாக்கம் மோட்சம், ஆயிரம்விளக்கு சபையர்.......

சென்னையில் சினிமா தியேட்டர் பெயர்களில் என்னனென்ன பஸ் ஸ்டாப்கள் இருக்கிறது என்று வெட்டியாக உட்கார்ந்து யோசித்ததில் வந்து கொட்டியது இவை. ஏதாவது விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள்.

Saturday, March 6, 2010

வினையைத் தாண்டி

இன்றைய தினகரனில் சினிமா பகுதியில் அரை பக்கத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பேட்டி வந்திருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? தினகரனை சன் குழுமம் வாங்கிய பிறகோ, உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்கு வந்தபிறகோ அவரது பிரத்யேக பேட்டி தினகரனில் வந்ததுண்டா?

குடும்பம் ஒன்று என்றாலும் தொழில் என்று வந்துவிட்டால் கறராக இருப்பது பெரிய இடங்களில் சகஜம் தான். சன் டிவியின் ஓய்வில்லாத விளம்பரங்களையும் மீறி "தீராத விளையாட்டுப் பிள்ளை" படுத்துவிட்டது. இந்த நேரத்தில் காதலை மையமாக வைத்து "விண்ணைத் தாண்டி வருவாயா" வந்து விளையாட்டுப் பிள்ளைக்கு இருந்த கொஞ்சநஞ்ச கூட்டத்தையும் இழுத்துக் கொண்டது.

இதனால் கடுப்பான சன் தரப்பு விண்ணைத் தாண்டி வருவாயாவை பத்திரிக்கை, டிவி விமர்சனங்களில் கண்டபடி விளாசியது. இதனால் இப்படத்தின் விநியாகஸ்தரான உதயநிதி எரிச்சலும் கோபமும் அடைந்தார். பிறகு யார் செய்த சமாதானமோ இப்பொது நாங்கள் ராசியாகிவிட்டோம் என்று சொல்லாமல் சொல்ல வந்துள்ளது உதயநிதி பேட்டி.

Wednesday, March 3, 2010

போட் மெயில் (Boat Mail)

முந்தைய பதிவில் போட் மெயில் என்னும் ரயிலைப் பற்றி எழுதியிருந்தோம். நண்பர்கள் சிலர் அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த பதிப்பு.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை - தூத்துக்குடி பயண நேரம் 22 மணி நேரம் (இப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸில் 12 மணி நேரம் ஆகிறது). பின்பு பயணிகள் தூத்துகுடியில் இருந்து கொழும்பு வரை படகில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட பிறகு, இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை இயக்கப்பட்டது. தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னார் வரை படகில் 19 கிலோமீட்டர் பயணம். பின்பு தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை ரயிலில் பயணம். கொழும்பு வரை செல்ல மொத்தமாக எழும்பூரிலேயே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

இலங்கைத் தீவும் இந்தியாவும் ஒரே ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்ததால் கடவுச்சீட்டு (Passport) தேவைப்படவில்லை. சுதந்திரத்திற்கு பின் இந்த ரயில் சேவை தனுஷ்கோடியோடு நிறுத்தப்பட்டது.

இப்பொது தெற்கு ரயில்வே என்று சொல்லப்படும் அப்போதையை தென் இந்திய ரயில்வே தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள மண் திட்டுகளில் மேல் ரயில் பாலம் கட்ட திட்டம் போட்டது, ஆனால் அந்த காலகட்டத்தில் முதலாம் உலகப் போர் வெடித்ததால் திட்டம் கைவிடப்பட்டது. 1964-ல் ஏற்பட்ட பெரும்புயலில் தனுஷ்கோடி சிக்கியபோது, அங்கு நின்றிருந்த இந்த ரயிலும் தண்டவாளமும் முற்றிலுமாக கடலில் அழிந்து போனது சோக வரலாறு.

போட் மெயில் இயங்கிய அதே காலகட்டத்தில் தான் இப்போது சென்னை - புதுடெல்லி இடையே ஓடிக்கொண்டிருக்கும் கிராண்ட் ட்ரங்க் (Grand Trunk) எக்ஸ்பிரஸ், பாகிஸ்தானின் லாகூரிலிருந்து நம்ம மேட்டுப்பாளையம் வரை அப்போது ஓடியது என்று தெரியுமா?