Tuesday, March 16, 2010

சபாஷ் சரியான போட்டி


விரைவு, சொகுசு, சர்வீஸ் என்று விதவிதமான பேருந்துகள் ஓடும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு புதுவரவு. அய்யய்யோ! அதற்கு எவ்வளவு கட்டணம் என்று பயணிகள் அதிர்ச்சி அடைய வேண்டாம். அரதப் பழசு முதல் புது டீலக்ஸ் வரை சென்னையில் ஓடும் பேருந்துகளில் 95% சதவீதம் சென்னையை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. டாடா பேருந்துகளின் எண்ணிக்கை மிக சொற்பம்.

இப்போது டாடா புத்தம் புதிய ஸ்டைலில் "மார்க்கோபோலோ" என்ற புதிய பஸ்களை சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியுள்ளது. லேலண்ட் சொகுசு பேருந்து போல் இல்லாமல் சற்று மாறுபட்ட தோற்றம், அழகான வடிவம், கவர்ச்சியான உள்கட்டமைப்பு என்று கண்களை கவருகிறது. முதல் கட்டமாக 59 பேருந்துகளை மா.போ.க வாங்கியுள்ளது. பல வழித்தடங்களில் இந்த பேருந்துகள் ஓடிக் கொண்டும் இருக்கின்றன.

சென்னை மற்றும் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் (ஏன் இப்பவும் கூட) லாரி, பஸ் மார்க்கெட்டில் அசோக் லேலண்ட் தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. பல வருடங்கள் முயற்சித்தும் வட இந்தியாவில் பரந்து விரிந்து கிடக்கும் டாடா மோட்டர்ஸின் சாம்ராஜ்ஜியத்தை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் அவர்களால் விஸ்தரிக்க முடியவில்லை. காரணம் அசோக் லேலண்ட் (இது எங்க ஏரியா! உள்ள வராதே!). டாடா மற்றும் லேலண்ட் இடையே "அது உன் ஏரியா இது என் ஏரியா!" என்று எழுதிக் கொள்ளப்படாத ஒப்பந்தமே உண்டு என்று இப்போதும் ஒரு பேச்சு உண்டு.
இப்போது டாடா மோட்டார்ஸ் கோட்டையை குடைய ஆரம்பித்துவிட்டது. இனிமேல் போட்டி கடுமையாக இருக்கும்.

ஒரு கேள்வி: டாடா மற்றும் லேலண்ட் இருவருமே குளிர்சாதன பேருந்துகளை உற்பத்தி செய்யும் போது, ஏன் மா.போ.க வால்வோவிடம் இருந்து பேருந்துகளை வாங்கியது? மற்ற தமிழநாடு அரசு போக்குவரத்து கழகங்களில் அசோக் லேலண்ட் பஸ்கள் தானே ஓடிக்கொண்டிருக்கின்றன?

1 comment:

Unknown said...

aritical was good. In this artical last qustion is the highlit of the artical

I like it.

If possible U put More qustions on all u r artical.

I don't know the answer for u r qustion