Sunday, December 19, 2010

அடடே! தமிழ் மீடியாவுக்கு ரோசம் வந்துவிட்டதே

தமிழ் ஊடகங்களில் சமீபமாக பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலை
அனைவரும் வரிந்து கட்டி எழுதுகிறார்கள். குமுதம்
ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், ஜூனியர் விகடன் போன்ற புலனாய்வு பத்திரிக்கைகள் எல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிராக எழுத ஆரம்பித்து விட்டன.இன்னும் சொல்லப் போனால், நேற்று (18.12.2010) வந்த ஜு.வியில் மொத்த 48 பக்கங்களில் 23 பக்கங்கள் ஸ்பெக்ட்ரம் செய்திகள் மட்டுமே!! ஜூவியில் கடந்த இரு வாரங்களாக ஆளும் கட்சி மீது உக்கிரமான அனல் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

குடும்பச் சண்டை காரணமாக சன் டிவியும் 'ஜேஜே' என்று ஸ்பெக்ட்ரம் பற்றி செய்தி வாசிக்கிறது. ஆனால் தமிழ் நாளேடுகளில் தினமணி மட்டுமே ஆரம்பம் முதல் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதி வந்தது. தினமலர் இப்போது எழுத ஆரம்பித்து விட்டது. ஆனால் பாமரர்களின் பத்திரிக்கை எனப்படும் தினத்தந்தி இந்த உலகத்தில் தான் இருக்கிறதா? என்று தெரியவில்லை. எப்படி எல்லாம் இருந்த தினத்தந்தி இன்று முரசொலியின் மறு பதிப்பாக வந்து கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலத்துக்கு வந்த போதே வட இந்திய ஊடகங்கள் ராசாவையும் திமுகவையும் உரித்து உப்புக்கண்டம் போட்டு விட்டன. 

பத்திரிக்கைகளில் வருவது ஒரு பக்கம் இருந்தாலும் நாடு நகரமெல்லாம் ஸ்பெக்ட்ரம் அலைதான் வீசுகிறது. அலுவலகங்கள், பேருந்து, ரயில், டீக்கடை, வீடு, சலூன், கல்யாண வீடு, சாவு வீடு, ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக், பிளாக்குகள், எஸ்.எம்.எஸ், கிராமங்கள், சிறு நகரம் என்று தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசாதவர்கள் இருக்க முடியாது. நம்மிடமே சுவிட்சர்லாந்து, டென்மார்க், துபாய், சீனா, ஆஸ்திரேலியா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தொடர்பு கொண்டு ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி விசாரிக்கிறார்கள் 

ஆனால் அனைவரிடமும் ஒரு தார்மீக கோபமும் அடுத்த தேர்தலில் திமுக தூக்கி எறியப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

7 comments:

Anonymous said...

தினத்தந்தி திமுகவுக்கு ஜால்ரா என்பது அவர்களைத்தவிர எல்லாருக்கும் தெரிந்து விட்டது. இப்படி ஒரு அல்பத்தனமான பிழைப்புக்கு...

சேக்காளி said...

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி இங்கே http://anbedeivam.blogspot.com/2010/12/blog-post_18.html

ELANGO T said...

தினத்தந்தி ஒரு செய்தித்தாள்.அது தி.மு.க,அ.தி.மு.க,காங்கிரஸ்,பா.ஜ.க என்று அனைத்து அரசியல் செய்திகளையும் சரியாகத்தான் வெளியிடுகிறது.ஒரு அரசியல் பத்திரிகை போல ஆவேசமாக எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை.--தி.தமிழ் இளங்கோ

Anonymous said...

You are in dream world, DMK will win coming election. So called Scam is just exiaturated one and it's a revenue loss. And this loss is not affecting common man and they are more benefited in this DMK rule.

வசந்த் ரெங்கசாமி said...

தினத்தந்தி ஒரு ஜால்ரா பத்திரிக்கை. அரசு விளம்பரதுக்காக இதை பற்றி செய்தி வெளியிடவில்லை .அவனுங்க சொல்லைனுங்கான தமிழ் நாட்டுக்கு தெரியாமலா போகும்.

சீ.பிரபாகரன் said...

தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட தினத்தந்தி இன்று ஒட்டுமொத்த தமிழர்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. தினத்தந்தி இன்று நாடார் மகாஜன சங்கத்தின் விளம்பர நோட்டிசாகவும் அந்த சமுதாயத்தை அனைத்து நிலைகளிலும் பாதுகாத்து வளர்தெடுக்கும் ஒரு அமைப்பாகவும் செயல்படுகிறது. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளாக நாடார் அரசியல் பத்திரிக்கையாகவே இது மாறிவிட்டது.

இவர்கள் இராசாத்தியம்மாளையும் கனிமொழியையும் தொடர்ந்து ஆதரித்து முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிடுவதும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும் சாதிப்பாசமே... ஸ்பெக்டரம் விவகாரத்தில் இவர்களை காப்பாற்றும் பணியை தினத்தந்தி கவனமாக சிறப்பாக செய்கிறது...

Anonymous said...

1. This is NOT a Scam and it’s a Revenue Loss. This is because, licenses are not given in action and awarded as per already followed up policy from 1999.
2. This Policy is NOT laid by Raja, it was done in 1999/2000 by then BJP Ministers, even Supreme Court has acknowledged this and asked CBI to look license allocation policy followed from 2001 and TATA also mentioned that most twisting of Telecom policies were happened during NDA Period.
3. The amount mentioned as loss of 1.7 Lack Croes is just exaggerated and inflated one and NOT real value. Because, Action Cost of 3G is used to calculate 2G Value, like using the Price of Basmathi Rice to calculate value of Ordinary Rice. Even Arun Souri (BJP Telecom Min) has mentioned that 1.7 Lack Crores loss is hypothetical, and the loss might be around 30,000 cr (The Hindu dated 19.12.10)
4. There might be some favor done for few companies and this is something very common nowadays. Even in Private/IT companies, while awarding tenders and Purchase Orders to Vendors, favor is shown for some vendors for some gain.
5. Ongoing CBI/SC investigations might damage the image of DMK to little extend as the hype is shown by certain section of media – But the impact will be very limited as the reach of such Medias on the common Voters might be just 10%. After 2 or 3 months, the importance shall be diluted.
6. Also, if really very large amount of Money Gain is involved, the Karunanithi & DMK Top leaders won’t keep & support Raja even after 2 rounds of CBI raids followed by CBI questioning him. Karunanidhi is not foolish to keep Raja if it’s going to have real impact in elections.
7. Finally, is this 2G issue directly effects common voter – The answer is NO. If the Opposition parties highlight the 2G loss, then DMK might counter by saying, because of that only the Mobile Bill in India is the cheapest in the whole world. Even poor and villagers can use mobile phone because of this policy. Loss to the Govt is the Gain for the Common Man, if the licenses are sold at higher price, then that will be charge backed from the Mobile Users Only.