Saturday, December 17, 2011

Times of India-வின் அடாவடி...!!!

தி வீக் என்ட் லீடர் என்ற இணையதளத்தில் கடந்த வாரம், “தி எம் ஃபேக்டர்” என்ற தலைப்பில் ஒரு ராதிகா கிரி என்ற பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையில், The opinion piece below the story “TN theatres bow to protests, pull the plug on Dam999,” started quite innocuously, defending freedom of expression. But the bomb was in the third sentence, which read: “Admittedly, the Mullaperiyar dam is an emotive issue and often exploited by political parties to generate sympathy among people in the southern districts.”

It is common knowledge that Mullaiperiyar (‘Mullaperiyar’ without the ‘I’ is typical Malayalee spelling and pronunciation, which Times of India prefers to follow) is an emotive issue in Kerala and not Tamil Nadu, though there is now a fear that the Kerala government, journalists and people together may make the issue emotive here also through the falsehoods they are systematically spreading.

So, without any doubt, one can say that the ‘Times View’ was a Malayalee’s view even if he or she was living in Chennai and working as a journalist.

Those with some insight into the media industry know the composition of the Times of India’s newsroom in Chennai. Every key post in the paper is held by a Malayalee – a Nair or Menon and so on. The Resident Editor, Political Editor and Metro Editor are all Malayalees.

டேம் 999 என்ற படத்துக்கு தடை விதிக்கப் பட்டது தொடர்பான செய்தியில், முல்லைப் பெரியாறு பிரச்சினை அரசியல்வாதிகள் தென் மாநில மக்களிடையே அரசியல் ஆதாயம் தேடுவதான ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினை. முல்லப் பெரியாறு பிரச்சினை தமிழ்நாட்டை விட கேரளாவில் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக இருந்தாலும், தற்போது தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களு சேர்ந்து பல்வேறு வதந்திகளை பரப்பி வருவதன் மூலம் இங்கேயும் இதை ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக்கி வருகின்றனர். இந்தக் கருத்தை டைம்ஸ் வியூ, அதாவது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்து என்ற போர்வையில் வெளியிட்டுள்ளனர். இது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்து அல்ல. மலையளிகளின் கருத்து.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை அலுவலகம் முழுக்க முழுக்க மலையாளிகளால் நிரம்பியுள்ளது. ரிப்போர்ட்டர்களாக தமிழர்கள் இருந்தாலும், ரெசிடென்ட் எடிட்டர், பொலிடிக்கல் எடிட்டர், மெட்ரோ எடிட்டர் என்று அனைவருமே மலையாளிகள் தான். அருண் ராம், கிரண், சுனில் நாயர், ஜெயா மேனன் என்று முழுக்க முழுக்க மலையாளிகள் ஆதிக்கமே. மலையாளிகள் தமிழ்நாட்டில் பணியாற்றுவதும், தமிழர்கள் கேரளத்தில் பணியாற்றுவதும் ஒரு ஜனநாயக நாட்டில் சகஜம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, தங்கள் மொழி மீதுள்ள பாசத்துக்காக செய்திகளில் நடுநிலை தவறுவதை எப்படி அனுமதிப்பது ?

முல்லைப் பெரியாறு பிரச்சினை, கேரளாவில் மட்டும்தான் உணர்வு பூர்வமான பிரச்சினையா ? இப்படி எழுதுவது நடுநிலையான எழுத்தா ? இவ்வாறு சென்னையில் ஊடகத்துறையில் உள்ள மலையாளிகள் அனைவரும் மிக மிக வலுவான ஒரு இடத்தில் உள்ளனர். எது செய்தியாக வேண்டும், எது செய்திகாகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். அச்சு ஊடகத்தை விட, காட்சி ஊடகத்தில் இவர்களின் ஆதிக்கம் வெகு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியமாக சொல்லப் படும் ஒரு காரணம், சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் என்ற ஊடக பயிற்சிக் கல்லூரி. இந்தக் கல்லூரியை நடத்துபவர் ஏசியா நெட் தொலைக்காட்சி சேனலை உருவாக்கிய சசிக்குமார். இவர் ஒரு மலையாளி. இந்தக் கல்லூரியில் படித்து வெளிவருபவர்களில் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருக்கின்றனர். இவர்கள் சென்னையில் உள்ள பெரும்பாலான ஆங்கில ஊடகங்களில் வேலைக்கு செல்கின்றனர். ஏற்கனவே ஆங்கில ஊடகங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் மலையாளிகளின் உதவியோடு, இவர்களுக்கு ஆங்கில ஊடகங்களில் எளிதாக வேலை கிடைத்து விடுகிறது.

மேலும், தமிழக ஊடக உலகத்தில் பரவலாக இருக்கும் ஒரு கருத்து, மலையாளிகளுக்குத்தான் ஆங்கிலம் நன்கு தெரியும் என்பது. இந்தக் கருத்தும் மலையாளிகளுக்கு ஆங்கில ஊடகங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

இந்த மலையாளிகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ்ச் சூழல் குறித்த புரிதல் இல்லாத காரணத்தால் இஷ்டத்துக்கு கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதி வருகிறார்கள்.

இப்படி மலையாளிகளின் ஆதிக்கத்தில் தமிழ்நாட்டு ஆங்கில ஊடகங்கள் இருப்பதால் என்ன பாதிப்பு என்றால், மலையாளிகளின் பார்வையை செய்தித்தாளின் பார்வையாக திரித்து வெளியிடும் போக்கு அதிமாகி இருக்கிறது.

நேற்றைய (டிசம்பர் 16, 2011) டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டையே எடுத்துக் கொள்ளலாம். நேற்று தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முல்லைப் பெரியாறு பிரச்சினையை விவாதிப்பதற்கென்றே நடைபெற்றது. தமிழகத்தில் வரலாறு காணாத அதிசயமாக, தமிழக அரசியல் கட்சிகள் கட்சி பேதத்தையெல்லாம் கடந்து, தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி ஒரே குரலில் குரல் கொடுத்தன.

இந்த விஷயம் தலைப்புச் செய்தியாக இடம் பெற வேண்டுமா என்றால் நிச்சயம் இடம் பெற வேண்டும். இந்து, டெக்கான் க்ரானிக்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் தமிழ்நாட்டு சட்டப்பேரவை தீர்மானத்தை செய்தியாக வெளியிட்டிருந்தன. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்து செய்தி என்ன தெரியுமா ?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் மலையாள பட ரிலீசுக்கு பாதிப்பு என்பதுதான் முதல் பக்கத்து செய்தி.


Dam row hits Malayalam film releases

Arun Janardhanan TNN

Chennai: They’re both much awaited films from Malayalam cinema’s biggest heroes — “Venicile Vyapari”, starring Mammootty, and “Arabiyum Ottakavum P Madhavan Nairum”, starring Mohanlal and directed by Priyadarshan. But audiences in Tamil Nadu may not get to see them soon as theatre owners are reportedly reluctant to screen the films due to the Mullaperiyar issue.
The Kerala Malayalam Film Distributors’ Association on Thursday said the release of the films was delayed since theatre owners in Chennai and other cities in Tamil Nadu had refused to take the film prints as they were afraid of attacks on their theatres.
Abirami Ramanathan, president of the Theatre Owners’ Federation in Chennai,said he was not aware of this. “We do not entertain decisions to stop the release of any film. Just like Malayalam films are doing well in TN, Tamil movies are running successfully in Kerala,” he said.

G P Vijayakumar, distributor of the Mohanlal film, said both mega movies from Kerala would not be released in Chennai on Friday. “The Indian release date is December 16. All major cities except Chennai are ready for release,” he said.

“The Tamil Film Exhibitors’ Association clarified that no decision had been taken to avoid Malayalam movies. But theatre owners have made individual decisions not to release the films as they are afraid of attacks due to the Mullaperiyar issue. We are still discussing the matter and the films may be released in two weeks,” he said.

K Jayakumar, general manager of Sangam Cinemas in Chennai, which screens Malayalam films, said his three theatres are booked for other movies, including “Mission Impossible: Ghost Protocol” and Vikram’s “Rajapattai”.
“We do not have the screens to release the Malayalam movies,” said Jayakumar.

Malayalam movies made on a budget of Rs 5 crore to Rs 8 crore usually earn Rs16 lakhtoRs20 lakh in Tamil Nadu. Major Malayalam films are released in about 25 theatres in Tamil Nadu.
Sabu Cherian, chairman of Kerala State Film DevelopmentCorporation,said10%to 15% of the revenues for Malayalam moviescomefrom Tamil Nadu. “Tamil films also do well in Kerala, attracting a large crowd. The issue has to be settled immediately,” he said.

Sources in Tamil Nadu Film Exhibitors’ Association said the state government has promised them security to screen Malayalam movies. “Both the DMK and AIADMK have no issues,but some theatre owners have taken a decision to skip screening the movies out of fear,” a source said.

மம்மூட்டி நடித்த வெனீசிலே வியாபாரி மற்றும் மோகன்லாலின் அரேபியும் ஓட்டக்காவும் ப்பி.மாதவன் நாயரும் என்ற இரண்டு திரைப்படங்கள் இன்று சென்னையில் ரிலீசாக வேண்டுமாம். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையால் இந்த இரு திரைப்படங்களை திரையிட, சென்னைத் திரையரங்க உரிமையாளர்கள் மறுக்கிறார்களாம். மலையாளத் திரைப்படங்களின் 15 சதவிகித வருமானம் தமிழ்நாட்டிலிருந்து என்பதால், இது மலையாளத் திரைப்பட உலகத்தை பாதிக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

அந்த முதல்பக்கத்து செய்தியில் இன்செட்டாக சிறிய அளவில் தமிழக சட்டசபையில் தீர்மானம் என்று போட்டு விட்டு, செய்தியை 9ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இதுதான் செய்தி வெளியிடும் லட்சணமா ? விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று போராடிக் கொண்டிருக்கும் சூழலில், மலையாளத் திரைப்படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று செய்தி வெளியிடும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை ஏன் புறக்கணிக்கக் கூடாது என்பதை தமிழாய்ந்த அன்பு உள்ளங்கள் நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தி வீக் என்ட் லீடர் வெளியிட்டுள்ள இந்த செய்திக்கு மறுப்பு வெளியிட சொல்லியும், 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் டைம்ஸ் ஆப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றி: சவுக்கு

No comments: