இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பல்வேறு கருத்துக்களை உள்வாங்கி வடிவமைக்கபட்டுள்ளது. குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தாலும் சில காரணங்களுக்காக கருணை மனுவை நிராகரித்ததற்கு ஏற்பட்ட தாமதம் இன்ன பிற வழிகளில் மேல்முறைஈட்டிற்கு வழி செய்கிறது.
நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள் , கைதிகளிடம் இருந்து வாங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும், வாதாடும் வக்கீல்களின் திறன்களின் அடிப்படையிலும் இன்ன பிற சாட்சியங்களின் அடிப்படையிலும் , வகுக்கப்பட்ட சட்டம் வரையரம்புகளை பொறுத்து தீர்ப்பு வழங்க வழி செய்கிறது. மேல் முறைஈடிற்கும் வழி செய்கிறது.
குற்றம் உறுதி செய்யபடுகின்ற போது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டு அதிக பட்ச தண்டனைகளுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கு, நடைமுறைகளுக்கு மாறாக மனிதாபிமான மற்றும் நாட்டு நடப்பு, சமூகத்தில் தண்டனையின் பாதிப்பு இவற்றை கருத்தில் கொண்டு அந்த தண்டனைகளை மன்னித்து வீரியத்தை குறைக்க ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் சில பிரத்தியேக அதிகாரங்களை கொடுக்கிறது .
சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோரது வழக்கில் காலம் தாழ்த்தப்பட்ட தண்டனை என்பது உச்ச தண்டனையை ஒத்தி வைக்க சில வழி வகைகளை செய்கிறது ..அதே சமயம் கடுமையான வாதங்களினால் சில சாதகமான தீர்ப்புகளும் வந்து சேரலாம். குடியரசு தலைவர் பிரதிபா பாட்டிலால் இந்த ஆண்டு வேறு இரண்டு வழக்குகளிலும் கருணை மனு நிராகரிகபட்டது. அந்த இரண்டு வழக்கும் நீதிமன்றத்தில் கருணை மனு நிராகரிக்க பட்டதற்கான கால தாமதத்தால் மேல் முறையீட்டில் உள்ளன. அதனால் விதிக்கப்பட தூக்கு தண்டனைக்கு இடை கால தடை உள்ளது .
1. சீக்கிய விடுதலை படை தலைவர் புல்லார் வழக்கு, ஜெர்மனியில் பணி புரிந்த இவர் மும்பையில் குண்டு வெடிப்புக்கு சதிசெய்து ஒன்பது பேரை கொன்றதாக தடா பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டவர்
2. அஸ்ஸாமை சேர்ந்த மகேந்திர நாத் தாஸ் என்பவர் ஒரு நபரை கடை தெருவில் வைத்து கழுத்தை அறுத்து தலையை எடுத்து சென்று காவல் நிலையத்தில் கொடுத்ததாக உள்ள கொடுர வழக்கு
மேற்கண்ட இரண்டு வழக்கிற்கும் காலம் கடந்த கருணை மனு நிராகரிபிர்க்கு கால தாமதத்துக்கான காரணம் கேட்டு நீதிமன்றம் உள்துறைக்கும்,மாநில அரசிற்கும், சிறை துறைக்கும் விளக்கம் அளிக்க கேட்டு உள்ளது .. இந்த விளக்கங்களின் அடிப்படையில் இதில் தீர்ப்பு வழங்கப் படலாம் ...மத்திய, மாநில அரசு துறைகளின் பதில்களின் கால அளவை பொறுத்து வழக்கு நீளலாம்.. இதே போல் இந்த பேரறிவாளன் இன்ன பிறர் மரண தண்டனை வழக்கும் சில காலம் ஒத்தி வைக்கப்பட்டு வழக்கு நடக்க வாய்ப்பு உள்ளது பின் வக்கீலின் வாத திறமையை பொறுத்து,வழக்கின் கால அளவை சில சாதக தீர்ப்பும் குற்றம் சாட்ட பட்டவர்களுக்கு வரலாம்..
56 வது நபராக சுதந்திர இந்தியாவில் தூக்கில் இடபடுபவர் யார் என்ற வினா அனைவர் மனதிலும் எழுந்து உள்ளது . இந்தியாவில் இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு தனஞ்செய் எனும் ஒரு காவலாளி ஒரு சிறு பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் சனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான் அதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஆட்டோ சங்கர் தமிழகத்தில் தூக்கில் இடப்பட்டான்.. இதற்கு அடுத்து கருணை மனு நிராகரிகபட்ட வழக்குகள் யாவும் மேல் முறையீட்டில் உள்ளன.
இந்த நிலுவையில் உள்ள வழக்குகளை புறந்தள்ளி மத்திய உள்துறை பேரறிவாளன், இன்ன பிறர் வழக்குகளில் சிரத்தை எடுத்து விரைவு படுத்துமாயின் அதன் பின் அரசியல் இருப்பது அர்த்தமாகிறது.. இதற்கு இடையில் தமிழாக அரசியல் புள்ளிகள் இந்த விவகாரத்தை எடுத்து ஜெயலலிதாவிற்கு நெருக்கடி கொடுக்க தயார் ஆகிறார்கள்.. முந்தைய கருணாநிதி தலைமையின் கீழ் உள்ள அரசால் அங்கிகரிக்பட்ட மூவரின் மரண தண்டனையை மற்றொரு அரசு மறுப்பது முரணாக தோன்றும் .. அதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது மீண்டும் விவாதத்திற்கு ஆகிறது .. அப்படி ஒரு முடிவை எடுத்தாலும் அதற்கு எதிராக காங்கிரசாரல் கொண்டு வரப்படும் மேல்முரைஈடிற்கு சட்டம் என்ன பதில் சொல்லும்?
மிக அதிக காலம் கடந்த தண்டனை என்பதும், மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளான ஒரு இனத்திற்கு , அதன் சமூக மக்களின் மனங்களுக்கு இதனால் மேலும் ஒரு பாதிப்பு என்ற கோணத்திலும் இந்த வழக்கிற்கு சில சாதகங்கள் வந்து சேரலாம். தமிழர்கள் , தமிழக அரசியல், இயக்க தலைவர்கள் ஒன்று இணைந்து செயற்பட்டால் மட்டுமே சாத்தியாமாகும்.
நன்றி: வசந்தமேனன்
No comments:
Post a Comment