Wednesday, February 24, 2010
கேட்டது கிடைத்ததா?
Sunday, February 21, 2010
ரயில்..!

Tuesday, February 16, 2010
யாமிருக்க பயமேன்
மகாபாரதம், ராமாயணம், கிருஷ்ண லீலை, அம்மன் தொடர்கள் என்று ஒரே கதையை பல சேனல்களில் திரும்ப திரும்ப பார்த்த நமக்கு முருகனைப் பற்றிய தொடர் சற்று வித்தியாசமாக, சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பலாம். புதிதாக அறிந்தும், தெரிந்தும் கொள்ள நிறைய தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்பு தூர்தர்ஷனில் வரும் ராமாயணம், மகாபாரதம் தொடர்களை அப்படியே தமிழ் டப்பிங் செய்து ஒளிபரப்புவார்கள். அதில் நடிகர்களின் வாய் அசைவுக்கும், வசனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அதே போல் நடிகர்களின் முக தோற்றத்திற்கும், கதாபாத்திர இயல்புக்கும் சம்பந்தம் இருக்காது. அது மாதிரி எல்லாம் இல்லாமல் இந்த தொடர் சற்று “Realistic” க்காக இருக்கும் என்று நம்புவோம்.
விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் தென்படும் ஆங்கில மோகம் இதில் இருக்காது என்பது ஒரு ஆறுதல் செய்தி (அப்படி இருந்தால் தமிழ்க் கடவுள் மன்னிப்பாரா என்று தெரியவில்லை!) எல்லாவற்றுக்கும் மேல் விஜய் டிவி இந்த தொடரை கடைசி வரை கொண்டு செல்லும் என்றும் நாம் முருகனை வேண்டிக் கொள்வோம். முருகனுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்ட தெரியுமா என்று கேட்காதீர்கள்!
நேரம்: இரவு 7.30 மணி. பாவம்! கோவணம் கட்டிய பழனியப்பனுக்கு எதற்கு "ப்ரைம் ஸ்லாட்" என்று நினைத்திருப்பார்கள் போல.
கனகவேல் காக்க..!
Saturday, February 13, 2010
Thursday, February 11, 2010
ஊமை பாஷை
தொலைக்காட்சியின் மூலையில் தெரியும் ஒரு சின்ன திரையில் ஒரு பெண்மனி செய்தியை இந்தியிலோ ஆங்கிலத்திலோ வாசிக்க, பெரிய திரையில்(!) சற்று தடித்த பெண்மனி (Sign Language) எனப்படும் ஊமை பாஷையில் செய்தியை வேகமாக விளக்கிக் கொண்டிருப்பார்..ஆனால் சேனலை மாற்றினால் காது கிழியும் அளவுக்கு காட்டுக் கூச்சல் போடும் இப்போதயை 24 மணி நேர செய்தி சேனல்கள் ஏன் இது போன்ற செய்திகளை இப்போது வழங்குவது இல்லை?
சமூகத்தில் ஒரு அங்கமான காது கேளாத, வாய் பேச முடியாத மக்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே தூர்தர்ஷன் என்ற அரசு நிறுவனம் வழங்கி வந்த ஒரு சேவையை, ஏன் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டபிறகும் இப்போது வழங்க முடியவில்லை?
ஒரே வார்த்தையில் பதில் வரும் வர்த்தக நோக்கு என்று..!
Tuesday, February 9, 2010
உலகம்
Monday, February 8, 2010
ஊடக வன்முறை
மாநாட்டின் அரசியல் நோக்கம் பற்றியோ, ஆளும் அரசின் அடக்குமுறை பற்றியோ விவாதிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பங்களுக்கு உண்டானது. ஆனால் மலேசிய துணை முதல்வர் உள்ளிட்ட பல வெளிநாட்டு தமிழர்கள், பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு பலதரப்பட்ட கருத்துக்களை பறிமாறிக் கொண்ட இந்த மாநாட்டைப் பற்றி தமிழகத்தின் எந்த ஒரு தொலைக்காட்சி, நாளிதழ்களில் ஒரு வரி செய்தி கூட இல்லை. இந்த மாநாடு பற்றி கோவை மக்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலகம் முழுவதும் 233 நாடுகளில் அகதிகளாக, கொத்தடிமைகளாக, கூலித்தொழிலாளிகளாக பரவியிருக்கும் தமிழர்கள் படும் துயரங்களை புதிதாக நாம் அறிய வேண்டியதில்லை.
இந்த மாநாடுக்கு விளம்பரம் தேடுவதோ, இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கருதுக்களுக்கு ஆதரவு தேடுவதோ நமது வேலையல்ல.. ஆனால் பிரபலமில்லாத ஒரு நடிகை அவரது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்தாலே அதை செய்தியாக்கும் 24 மணி நேர செய்தி சேனல்கள் என்று சொல்லிக் கொள்ளும் அலைவரிசைகளில் இந்த மாநாட்டைப் பற்றி மூச்சு இல்லை. தினசரிகளிலும் இதே நிலை தான். தெரிந்த விஷயம் தான் என்கிறீர்களா...! அட போங்க..!


