தங்கக் காசு நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கவனத்துக்கு.
கோல்டு குவெஸ்ட் நிறுவனம் தங்க நாணயங்களோ, கமிஷனோ பெறாத 200 பேருக்கு மட்டுமே பணத்தை திருப்பி தர முடியும் என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டதாகவும், அதை ஏற்காத சி.பி.சி.ஐ.டி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் அதனால் தான் இந்த கமிட்டி அமைப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினகரனில் செய்தி வந்துள்ளது.
ஆனால் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த விசாரணையின் போதே பலருக்கு தங்க நாணயத்தின் மதிப்பு போக ஒரு தொகை ரொக்கமாக நீதிமன்றத்தில் வைத்தே வழங்கப்பட்டது (25,000 ரூபாய் கட்டியவர்களுக்கு 17,000 சொச்சம் தரப்பட்டதாக ஞாபகம்). மோசடிப் புகார் எழுந்த போது சென்னை மாநகர / சிபிசிஐடி போலீஸாரிடம் முறையாக புகார் தரப்பட்டவர்களுக்கு மட்டுமே பணம் திருப்பி தரப்படுவதாகவும் பெசிக்கொண்டார்கள்.
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் பாதிக்கபட்டவர்கள் இந்த கமிட்டியிடம் வரும் மே 31, 2010 தேதிக்குள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. (Complaints / victims can file their claims on or before May 31, 2010 after an announcement is made by the settlement commissioner in local dailies to this effect).
முதலில் புகார் தெரிவிக்காதவர்கள் இப்போது தெரிவிக்கலாமா என்பது பற்றி தெரியவில்லை. மோசடிப் புகார் எழுந்த போதே நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் புகார் தரவில்லை. புகார் எழுதிக் கொடுத்தாலும் வரவா போகிறது என்ற எண்ணமும், வெளியே தெரிந்தால் அவமானம் என்றும் நிறைய பேர் புகார் கொடுக்கவில்லை. அப்போது புகார் கொடுக்காதவர்கள் இந்த கமிட்டியிடம் முறையிடலாமா என்று அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
பிரச்சனை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நிதிநிறுவன மோசடிகள் தான் தமிழ்நாட்டில் நின்றபாடு இல்லை.
எததனை காலம் தான் ஏமற்றுவார் இந்த நாட்டிலே!!!!
--------------------------------------------
சமீபத்திய துக்ளக் தலையங்கம் பொருத்தமாக கூறியுள்ளது. "உலகின் மற்ற நாடுகளில் எப்படியோ – தெரியவில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில், விரைவு வருமானம் உள்ள சமாச்சாரங்களில், நேர்மைக் குறைவு பெரிய அளவில் இருக்கிறது. பண முதலீடு செய்து, பல வருடங்கள் உழைத்து, தரமான பொருளை உற்பத்தி செய்து, ஆரம்ப நஷ்டங்களைத் தாங்கி, போட்டிகளை எதிர்கொண்டு, வர்த்தகத் திறனைக் காட்டி... பின்னர் லாபத்தைக் காணக்கூடிய தொழில்கள் பல உண்டு. இவற்றில் நேர்மைப் பஞ்சம் அதிகம் இருக்காது. சூதாட்டம் மாதிரி, முதலைப் போட்டு, உடனடி லாபம் எதிர்பார்க்கக் கூடிய வர்த்தகங்களும் உண்டு; இவற்றில் நேர்மைக்குப் பஞ்சம் அதிகம் இருக்கும்"
No comments:
Post a Comment