Wednesday, March 10, 2010

கார்பரேட் க(அ)ல்சர்

சரியான விடையை தேர்வு செய்க

1. அலுவலகத்துக்கு 5 நிமிடம் தாமதாக சென்றால் ஏற்படும் உடனடி விளைவு?

அ. நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்குச்சந்தையில் கடுமையாக சரியும்.
ஆ. வயதான நிறுவன முதலாளிக்கு மாரடைப்பு ஏற்படும்.
இ. ஏன் தாமதம்? என்று மேலாளருக்கு விளக்கி அவர் அருளும் நல்லவற்றை சிரத்தையோடு கேட்க வேண்டும் (இது மெற்சொன்ன இரண்டையும்விட பயங்கரமானது என்பதை நினைவில் கொள்க).

2. மேலாளர் என்பவர்

அ. நீங்கள் தாமதமாக வரும்போது நேரத்தில் வந்து, நீங்கள் நேரத்தில் வரும்போது தாமதமாக அலுவலகத்திற்கு வருபவர்.
ஆ. எந்த வேலையும் செய்யாமல் அதிக வேலை செய்வது போல் காட்டிக் கொண்டு, நீங்கள் ஒழுங்காக வெலை செய்வது இல்லை என்று மேலிடத்தில் போட்டுக்கொடுப்பவர்.
இ. மேற்கூறிய இரண்டும்.

3. நீங்கள் தெரியாத்தனமாய் தவறு செய்துவிட்டால், உங்களை நோக்கி வரும் முதல் வசனம்

அ. உங்களோட "ஆட்டிடூயூட்" சரியில்லை.
ஆ. உங்களுக்கு "கவுன்சிலிங்" தேவைப்படுது.
இ. எனக்கு அப்பவே தெரியும். நீங்க இதுக்கு ஃபிட் ஆகமாட்டீங்க.

4. "டிரஸ் கோடு" என்பது

அ. திருவான்மியூரில் இருக்கும் அலுவலகத்திற்கு வில்லிவாக்கத்தில் இருந்து கிளம்பும் போதே "டை" கட்டியிருக்க வேண்டும்.
ஆ. சாக்ஸை துவைக்காவிட்டாலும் ஷூவுக்கு பாலிஷ் போட்டிருக்க வேண்டும்
இ. கலர் சட்டை போடாமல், வெள்ளை சட்டைதான் போட வேண்டும். வெள்ளையும் ஒரு கலர்தானே? என்று அநாவசிய கேள்விகள் கூடாது.

5. மறந்தும் நினைத்துவிடக்கூடாதது?

அ. சம்பள உயர்வு.
ஆ. பதவி உயர்வு.
இ. மேற்கூரிய இரண்டும்.

6. மேலதிகாரி தினமும் ஒருமுறையேனும் அனைவரிடமும் உச்சரிக்கும் வார்த்தை

அ. நீ போனா எனக்கு ஆயிரம் பேர் கிடைப்பான்.
ஆ. உன்னையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தா?
இ. ஏன் நீ மட்டும் இப்படி இருக்க?

7. முதலாளி வீட்டு மாடு அன்று ஒரு படி பால் கம்மியாக கறந்தால்

அ. உங்களுக்கு "ஸ்கில் செட்" போதவில்லை.
ஆ. உங்களுக்கு இன்னும் "ட்ரெய்னிங்" தேவைப்படுகிறது.
இ. நீங்கள் வேலையில் "ஸ்மார்ட்" ஆக இல்லை.

8. அலுவலக நேரத்திற்கு பிறகு நீங்கள் உங்கள் சகாவிடம் பேசிக்கொண்டிருந்தால்

அ. அலுவலகத்தில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க முயற்சி செய்கிறீர்கள்.
ஆ. போட்டி நிறுவனத்துக்கு உளவு பார்க்கிறீர்கள்.
இ. நிறுவனத்தை கைப்பற்ற கூட்டு சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்.

9. சேல்ஸ் டார்கெட்?

அ. அன்டாகா கஜம் அபூம்கா திஜம் திறந்திடு சீசே!
ஆ. ஜாலிலோ ஜிம்கானா!
இ. ஙேஙேஙேஙேஙேஙேஙேஙேஙே......

10. காஸ்ட் கட்டிங்?

அ. ஒரு ரூபாயை சேமிப்பது எப்படி என்று பத்து ரூபாயில் ரூம் போட்டு யோசிப்பது.
ஆ. அநாவசிய செலவுகளை அதிகரித்து, அவசிய செலவுகளை குறைப்பது.
இ. எதுவும் சிக்கவில்லையா? சம்பளத்தை குறை.. ஆளைத் தூக்கு...

எல்லா கேள்விகளுக்கும் சரியான விடை அளித்துவிட்டீர்களா? வாழ்த்துக்கள்! உங்களுக்கும் கார்பரேட் அல்சர் ஸாரி கார்பரேட் கல்ச்சர் வந்துவிட்டது..

1 comment:

Anonymous said...

yen indha kolai veri ungalukku!