Wednesday, March 31, 2010

சூதாட்டம்.. ஆச்சிரியம்.. அசிங்கம்

இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனுக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணி அடுத்த ஆண்டு முதல் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட போகின்றதாம்! ஐ.பி.எல் என்பது ஒரு சூதாட்டம், பங்குச் சந்தை என்பதும் ஒரு சூதாட்டம் தான். இரண்டு சூதாட்டங்களையும் ஒன்றினைத்து ஒரு மெகா சூதாட்டம் ஆடப்போகிறார்கள்.
-------------
பென்னாகரத்தில் அ.தி.மு.க அவமானகரமான தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்து தொண்டர் ஒருவர் தீக்குளித்துவிட்டார். இது நடந்தது ஈரோட்டில். திராவிட அரசியல் கட்சி தொண்டனுக்கு தீக்குளிப்பது எல்லாம் டீ குடிப்பது மாதிரி. இதற்கு பின் வந்த செய்தியை தான் ஒன்றுக்கு இரண்டு முறை படித்தும் நமக்கு மயக்கும் வராத குறைதான். தீக்குளித்து ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்க்க ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து வருகிறாராம்...!
------------
அடுத்த ஈழ யுத்தம், பிராபகரன் மரணம், பொட்டு அம்மான் கடிதம் என்று ஈழப்போர் பற்றியும், புலித் தலைவர்கள் பற்றியும் சகட்டுமேனிக்கு எழுதுவதை என்றைக்கு இந்த விகடன், குமுதம், நக்கீரன் மற்றும் இதற ஊடகங்கள் நிறுத்திக் கொள்ளும் என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் "நமக்கு கிடைத்த நம்பகமான தகவல்படி பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பேயில்லை" என்று எழுதினார்கள், அடுத்து "இந்தியாவின் தயவோடு அடுத்த ஈழயுத்தம் ஆரம்பிக்கும்" என்றார்கள். இப்போது "பொட்டு அம்மான், பிராபகரனிடமிருந்து கடிதம் வந்துள்ளது" என்கிறார்கள். இது போல் பல சம்பந்தம் இல்லாத முரணான செய்திகளை அடித்துவிடவேண்டியது. ஏதேனும் ஒன்று உண்மை என்று தெரியவரும் பட்சத்தில் ஜூ.வியில் அன்றே சொன்னோம், நக்கீரன் சொன்னபடி, ரிப்போர்டரில் சொல்லியிருந்தோம் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிகொள்வது..

இவர்களுக்கெல்லாம் விற்பனை ஒன்றே குறிக்கோள். அதற்காக கண்டதையும் எழுதுவார்கள்.
என்ன பொழப்பய்யா இது...!

2 comments:

Unknown said...

if ask to magazine this question they will answer " this is business ethics"

Shunmugavel said...

Really Its Great... Its Very Useful and also think to others also