Thursday, April 29, 2010

ஆண்டவா! இவர்களிடம் இருந்து தமிழ் நாட்டை காப்பாற்று!

தமிழனாய் பிறந்ததற்கே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு பிராபகரன் தாயார் பார்வதி அம்மா சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் தரை இறங்க விடாமல் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பிப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதற்கு விளக்கமளித்த கருணாநிதி இது முழுவதும் மத்திய அரசின் முடிவு, இதில் தமிழக அரசு தலையிட முடியாது, இதைபற்றி எதுவுமே எனக்கு தெரியாது என்று கதையளந்தார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் இன்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் "பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை மற்றும் தாய் பார்வதி அம்மாள் ஆகியோரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையிலேயே பார்வதி அம்மாள் அனுமதிக்கப்படவில்லை. தமிழக அரசு தனது கடிதத்தினை திரும்ப பெறும் வரையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய இயலாது" என்று கூறுகிறார்கள்.

ஏன் இந்த கண்ணாமூச்சி? பார்வதி அம்மா வருவது கருணாநிதிக்கு பிடிக்கவில்லை என்றால் விசா கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே? ஏன் விசா கொடுத்தார்கள் பிறகு ஏன் திருப்பி அனுப்பினார்கள்? இதுவரை இந்த கேள்விக்கு அரசாங்கங்கள் பதில் அளிக்கவில்லை.

----------------------------------------

சமீபத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்)

"எப்போதெல்லாம் அதர்மம் தலை விரிக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்று சொன்னது கிருஷ்ண பகவான். ஏப்ரல் 30 - சுறா ரிலீஸ், மே - 1 எங்கள் 'தல' பிறந்த நாள்."

மேலே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இரண்டு கேள்விகள்.

1. நீங்க திருந்தவே மாட்டீர்களா?
2. இந்த நாட்டை உங்களிடம் இருந்து காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?

கடைசியாக கருணாநிதிக்கு இரண்டு கேள்விகள்.

1. ஒரு முதலமைச்சர், கட்சித் தலைவராக இல்லாமல் மிகச் சாதாரண, நோயுடன் போராடும், தள்ளாத வயது முதியவராக நீங்கள் ஒரு மருத்துவமனைக்கு போகும் போது அங்கு துரத்தியடிக்கப்பட்டால் அந்த வலியையும், அவமானத்தையும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?

2. தீராத நோயுடன் போராடும் உங்கள் மகன்களில் ஒருவர் அடிக்கடி சிகிச்சைக்கு வெளிநாடு செல்கிறார். அப்படி போகும் போது அந்த நாட்டில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?

பி.கு: மேற்கூறிய இரண்டும் கனவிலும் நடக்காது என்பது வேறு விஷயம்.

2 comments:

Unknown said...

vadivelu joku gabagam thaan varuthu

athu pona masam
ithu intha masam

neeinga keta kelvi poi correcttana perosonuku pona roma santhosam

Admin said...

Niyangalai kettal terrorist endru kooda solvargal.